தனது 171வது படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?

24 6617b3b39bb56

தனது 171வது படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் என 3 பேருமே படு பிஸியாக படங்கள் நடித்து வருகிறார்கள்.

ரஜினி வேட்டையன், விஜய் கோட் மற்றும் அஜித் விடாமுயற்சி படங்கள் நடித்து வருகிறார்கள். படங்கள் நடிக்கும் முன்னணி நடிகர்களில் விஜய்-ரஜினி படங்கள் இடையே அதிக போட்டி நடந்து வருகிறது.

தற்போது சம்பள விஷயத்தில் ஒருபடி மேலே போய் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார் விஜய்.

விஜய் நடித்துக் கொண்டிருக்கும் கோட் திரைப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியதாகவும் அடுத்து தான் நடிக்கப்போகும் 69வது படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்திற்காக ரூ. 150 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி தான் நடிக்கப்போகும் தலைவர் 171வது படத்திற்காக ரூ. 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்க போவதாக கூறப்படுகிறது.

இந்த விவரத்தை பார்க்கும் போது விஜய்யின் சம்பளத்துடன் ரஜினி சம்பளம் நெருங்கிவிட்டதாக தெரிகிறது.

அதோடு விஜய் 69வது படத்தோடு நடிப்பை நிறுத்திவிட ரஜினியின் சம்பளம் அடுத்தடுத்த படங்களில் எவ்வளவு உயர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Exit mobile version