தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும், இப்படத்தில் நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ஷோபின் ஷபீர், உபேந்திரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் குறித்து லோகேஷ் சொன்ன விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” ரஜினி சார் என்னை வாழ்க்கை குறித்து சிந்திக்க வைத்தார். நான் அழுதேன், சிரித்தேன். ஒவ்வொரு நாளும் நான் அவரிடம் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.