ரஜினிக்கு வெளிநாட்டில் கிடைத்த கௌரவம்! நன்றி தெரிவித்து வீடியோ

24 664f78f387173

ரஜினிக்கு வெளிநாட்டில் கிடைத்த கௌரவம்! நன்றி தெரிவித்து வீடியோ

நடிகர் ரஜினி தற்போது வேட்டையன் பட ஷூட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டார். அதன் பின் அவர் துபாய்க்கு சென்று இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி இருக்கிறது. இதன் மூலமாக அவர் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு குடிமகன் போல அங்கு சென்று வரலாம். மேலும் பல்வேறு சலுகைகளும் கிடைக்கும்.

தற்போது ரஜினி ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். மேலும் தனது நண்பர் லுலு க்ரூப் தலைவர் யூசுப் அலிக்கும் அவர் நன்றி கூறி இருக்கிறார்.

Exit mobile version