24 661fa56d53908
சினிமாசெய்திகள்

ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர் தானா! ஜெயிலர் 2விற்கு பின் இப்படியொரு கூட்டணியா

Share

ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர் தானா! ஜெயிலர் 2விற்கு பின் இப்படியொரு கூட்டணியா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் தான் தலைவர் 171. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 22ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பும் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்ததாம்.

தலைவர் 171 படத்திற்கு பின் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் படம் ஜெயிலர் என கூறப்படுகிறது. ஜெயிலர் 2 குறித்து தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு பின் அவர் நடிக்கப்போகும் படம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பேசியுள்ளார்.

அதன்படி, இப்படத்தை ஐசரி கே கணேஷ் தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். ஆனால், இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வெளிவரவில்லை. இந்த நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் கடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் ஐசரி கே கணேஷ் சார் என்னை தயாராக இருக்க சொன்னார்.

ரஜினி அல்லது கமலிடம் நாம் இணைந்து படம் பண்ணுவோம் அதற்காக தயாராக இருங்க என கூறியதாக தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐசரி கே கணேஷை தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவும், ரஜினியின் கால்ஷீட்காக காத்திருக்கிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...