அட்டகாசமாக வந்தது ரஜினியின் கூலி பட படப்பிடிப்பு அப்டேட்… எங்கே, எப்போது?

WhatsApp Image 2024 07 05 at 17.47.20 4

அட்டகாசமாக வந்தது ரஜினியின் கூலி பட படப்பிடிப்பு அப்டேட்… எங்கே, எப்போது?

வேட்டையன் படத்தை முடித்த கையோடு ரஜினி-லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமிட்டாகி இருக்கும் கூலி படப்பிடிப்பில் இறங்கிவிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ், ரஜினி அவர்களின் கூலி படத்தின் லுக் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலானது.

இந்த நிலையில் ரஜினி அவர்கள் சமீபத்தில் ஹைதராபாத்தும் சென்றார்.

இந்த நிலையில் ரஜினியின் கூலி படத்தின் படப்பிடிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். ஹைதராபாத்தில் இன்று முதல் கூலி பட படப்பிடிப்பு தொடங்கியதாம்.

4 நாட்கள் மட்டுமே அங்கு படப்பிடிப்பு நடக்க பின்னர் ஜுலை 10ம் தேதி முதல் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் இதற்காக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் இங்குதான் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் இதற்காக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் இங்குதான் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version