அம்பானியை பாராட்டினார் ரஜனி!

download 9 1 1 1

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜனி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரஜினி சமீபத்தில் மும்பையில் அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், ரஜினி தன் நண்பர் அம்பானிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ரஜினி பதிவு அதில், மும்பையில் உலக தரம் வாய்ந்த பிரம்மாண்ட திரையரங்கம் உருவாக்கியதற்கு என் நண்பர் முகேஷ் அம்பானிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். நிதா அம்பானி ஜி இது போன்ற தேசபற்று மிகுந்த மனதை மயக்கும் நிகழ்ச்சியை வழங்கியதற்காக உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை. இந்த திரையரங்கில் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு கனவு உள்ளது. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

#cinema

Exit mobile version