நடிகர், நடிகைகளை மிஞ்சிய இயக்குனர் ராஜமௌலியும் அவரது மனைவியும்.. வீடியோ இதோ

24 6618cd0584efc

நடிகர், நடிகைகளை மிஞ்சிய இயக்குனர் ராஜமௌலியும் அவரது மனைவியும்.. வீடியோ இதோ

பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் இயக்கத்தில் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளிவந்தது.

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக மகேஷ் பாபுவுடன் இணைந்துள்ளார் ராஜமௌலி.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. பாகுபலி 1,2 போல் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கும் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என ராஜமௌலி கூறியிருந்தார். இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், இயக்குனர் ராஜமௌலி தனது மனைவி ரமா ராஜமௌலியுடன் இணைந்து நடனமாடியுள்ள வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Exit mobile version