காவிய அந்தஸ்தைப் பெற்ற காதல் படங்களில் ஒன்றாக 7ஜி ரெயின்போ காலணி படம் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு வெளியான இப்படத்தை செல்வராகவன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய இப்படம் விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஒரு தலை காதல், காதலின் பிரிபு, பிரிவின் வலி என அழுத்தமான திரைக்கதையோடு படத்தை எடுத்திருந்தார் செல்வராகவன்.
சோனியா அகர்வால், ரவி கிருஷ்ணா ஜோடியாக நடித்த இப்படத்தின் 2ம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதன்படி, 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக செல்வராகவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, படத்தை தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் டீஸர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.