தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.
இந்தியன் 2 உட்பட மேலும் 5 இந்தி மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தன்னுடைய திரைப்பயணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ரகுல் பிரீத் சிங்
‘‘ கொண்ட போலம் என்ற தெலுங்கு படத்தில், ஆடு மேய்க்கும் பெண்ணாக நான் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. காடுகளில் ஆடுகளை மேய்க்கும்போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைகளுக்கு சென்றது. கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது. அப்போதுதான் ஆடு, மாடு மேய்ப்பவர்களின் கஷ்டங்கள் எனக்கு புரிந்தன. அந்த படத்தில் நடிக்க மிகவும் கஸ்டப்பட்டேன்.
O.T.T படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன. நான் ஒப்புக்கொள்ளவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் மாத்திரம் நடிக்க விரும்புகிறேன். இவ்வளவு நாட்களாக நடித்துவிட்டு இப்போதும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்காமல் இருந்தால் சரியல்ல.
கதைகள் தேர்வில் கவனமாக இருக்கிறேன். எனக்கு கனவு கதாபாத்திரம் இல்லை. ஆனால் ஒரு படம் நடித்தால் வாழ்நாள் முழுவதும் ரசிகர்கள் மனதில் பசுமையாக நிலைத்து இருக்க வேண்டும் என்று மட்டும் ஆசைப்படுகிறேன். பாகுபலி மாதிரி கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது” என்றார்.