10 34
சினிமாசெய்திகள்

நடிகர் ராகவா லாரன்ஸ் சொத்து மதிப்பு! பிறந்தநாளில் வெளிவந்த தகவல்

Share

நடிகர் ராகவா லாரன்ஸ் சொத்து மதிப்பு! பிறந்தநாளில் வெளிவந்த தகவல்

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். நல்ல திரையுலக கலைஞர் என பெயர் எடுத்தது மட்டுமின்றி நல்ல மனிதர் என்று அனைவராலும் கூறப்பட்டு வருகிறார்.

தெலுங்கில் வெளிவந்த ஸ்பீடு டான்சர் படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் தமிழிலும் ஹீரோவாக நடித்து வந்தார், ஆனால், ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம் என்றால் அது முனி தான்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என தொடர் வெற்றியை கொடுத்து வந்தார். அடுத்ததாக காஞ்சனா 4 படத்திற்கான கதையை தயார் செய்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கும், பென்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று ராகவா லாரன்ஸுக்கு 48வது பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 80 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
9
இலங்கைசெய்திகள்

செம்மணியில் இன்று மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள்..

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதிதாக 04...

10
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் வர்த்தக உறவை பலப்படுத்த இலங்கைக்கு அவசர அழைப்பு!

இந்தியாவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க, சமீபத்தில் முடிவடைந்த பிரித்தானிய – இந்தியா...

6
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அதிரடி தீர்மானம்! அடுத்தக் கட்ட நகர்வுக்கு தயாராகும் அரசாங்கம்

அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் மேலும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும...

8
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது...