தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமை.. உண்மையை உடைத்த பிரபல நடிகை ராதிகா ஆப்தே
பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தின் மூலமாக கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே.
இவர் அந்தாதுன், லஸ்ட் ஸ்டோரீஸ், சோக்ட் முதலிய பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பரவலாக அறியப்பட்டார்.
இந்நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த பேட்டியில், “தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது. தாங்க முடியாது, அந்த அளவிற்கு பெண்களை மோசமாக நடத்துகிறார்கள்”.
“நடிகர்கள், இயக்குநர்கள் பெண்களை மதிப்பதே இல்லை. அங்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். இதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டேன்” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
Comments are closed.