ராயன் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு.. எப்போது தெரியுமா?

24 665b14bfd19b7

நடிகர் தனுஷ், பவர் பாண்டி படத்தின் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்துவிட்டார். தற்போது இவர் தனது 50 வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

முன்னதாக ராயன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது ஆனால் தேர்தல் நடைபெறுவதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில் ராயன் படத்தை ஜூலை மாதம் 26 ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Exit mobile version