பரபரப்பாக பேசப்படும் மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை… புகழ் கூறிய விஷயம்

24 667829883488e

பரபரப்பாக பேசப்படும் மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை… புகழ் கூறிய விஷயம்

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி மக்களை சிரிக்க வைக்க உருவாக்கப்பட்ட ஒரு ஷோ.

4 சீசன்கள் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாக 5வது சீசன் இந்த வருடம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனால் இப்போது அந்த நிகழ்ச்சி பிரச்சனையில் உள்ளது என்பதை கேட்கும் போது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் உள்ளது.

இந்த பிரச்சனை எப்போது முடியும் என்பது தான் ரசிகர்களின் கேள்வி. இருவருக்கும் ஆதரவு குரல் கொடுத்து பிரபலங்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழிடம், குக் வித் கோமாளி மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர், அது அவர்களுக்குள் உள்ள பிரச்சனை, உங்களுக்கும் எனக்கும் பிரச்சனை என்றால் நாம் பேசலாம் அதனை Social Media கொண்டு வரக்கூடாது.

உங்கள மாதிரி தான் எங்களுக்கும், அவர்களுக்குள் என்ன பிரச்சனை தெரியாது, சேனலுக்கு வருமா என்றும் தெரியாது.

இந்த பிரச்சனை பொதுவெளிக்கு வந்ததே என கேட்க, ஒரு வீடியோ பார்த்துட்டு 1000 பேர் ஒரு வீடியோ போடுகிறார்கள், எது பிரச்சனையோ அவர்கள் இருவரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வரட்டும், அதன்பின் பார்ப்போம் என கிளம்பிவிடுகிறார்.

Exit mobile version