10 29 scaled
சினிமா

சமந்தா, தமன்னாவை தொடர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரியங்கா மோகன்.. அதுவும் முன்னணி நடிகரின் படத்தில்

Share

சமந்தா, தமன்னாவை தொடர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரியங்கா மோகன்.. அதுவும் முன்னணி நடிகரின் படத்தில்

புஷ்பா படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா என்கிற பாடலுக்கு நடனமாடி இருந்தார். அப்படத்தின் வெற்றிக்கு சமந்தாவின் நடனமும் முக்கிய காரணமாக அமைந்தது.

இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் தமன்னா, காவாலா பாடலுக்கு நடமாடி அப்படத்தின் வெற்றிக்கு உதவியிருந்தார். மேலும் பாலிவுட் படங்களிலும் தொடர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் பிரபல நடிகை பிரியங்கா மோகன் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார் என அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது” என கூறியுள்ளார். மேலும் வெளியிட்டுள்ள போஸ்டரில் “பிரியங்கா மோகனின் கேமியோவிற்கு நன்றி” என தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...