tamilni 6 scaled
சினிமா

பிரேமலு 2 இந்த பண்டிகைக்கு வெளியாகிறதா.. புது அப்டேட் இதோ

Share

பிரேமலு 2 இந்த பண்டிகைக்கு வெளியாகிறதா.. புது அப்டேட் இதோ

சமீப காலமாக மலையாள சினிமா படங்கள் தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் தமிழ் ரசிகர் பலரால் விரும்பப்பட்ட திரைப்படம் பிரேமலு.

வெறும் ரூ. 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ.136 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லென், சங்கீத் பிரதாப் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படம் ஆஹா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் உள்ளது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, படக்குழுவினர் பிரேமலு படத்தின் இரண்டாம் பகுதி குறித்து அறிவித்தனர்.

இந்த நிலையில், தற்போது இந்த படம் குறித்து ஒரு புது தகவல் வெளியானது. அதாவது பிரேமலு இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கும் எனவும், ஷூட்டிங் முடிந்து இந்த படம் ஓணம் பண்டிகை அன்று வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியானது.

ஆனால், இது தொடர்பான படக்குழுவிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

images 7 1
சினிமாபொழுதுபோக்கு

அப்பாவின் பெயரில் வளரக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார்: இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறித்து சித்தப்பா விக்ராந்த் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள நிலையில், அவரது...

large images 2022 11 24t235258277 55463
சினிமாபொழுதுபோக்கு

பாடகி சின்மயி வீடு மற்றும் திருச்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடர் புரளிகள் என உறுதி – காவல்துறை தீவிர விசாரணை!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு...