கேஜிஎப் இயக்குனருடன் கைகோர்த்த டாப் நடிகர்.. பூஜையுடன் துவங்கிய பிரமாண்ட படம்

9 12

கேஜிஎப் இயக்குனருடன் கைகோர்த்த டாப் நடிகர்.. பூஜையுடன் துவங்கிய பிரமாண்ட படம்

கன்னடத்தில் வெளிவந்த கேஜிஎப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குனர் பிரஷாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து உலகளவில் ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

கேஜிஎப் 2 படத்தை தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த சலார் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக தெலுங்கு டாப் ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் கைகோர்த்துள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்று முடிந்த நிலையில், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் அஜித் – இயக்குனர் பிரசாந்த் நீல் கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் அஜித் – பிரஷாந்த் நீல் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று

Exit mobile version