அப்போ சூப்பர்ஸ்டார், இப்போ தளபதி.. பிரபல இயக்குனர் கூறிய விஷயம், என்ன தெரியுமா
ரஜினிக்கு பின் விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்ற பேச்சு தொடர்ந்து பல இடங்களில் பேசப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் கூட சமூக வலைத்தளத்தில் எழுந்தது.
ஆனால், ரஜினிகாந்த் எனக்கும் விஜய்க்கும் எந்த போட்டியும் இல்லை என கூறி அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அதே போல் விஜய்யும், சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என கூறியது அனைத்திற்கும் முடிவாக அமைந்தது.
சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கி சூப்பர்ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் ரஜினியின் அருணாச்சலம் படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள அரண்மனை 4.
இப்படத்தின் ப்ரோமோ விழாவில் கலந்துகொண்ட சுந்தர் சி-யிடம் அருணாச்சலம் படத்தில் இப்போது யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு “கண்டிப்பாக விஜய் தான். அப்போது சூப்பர்ஸ்டார் என்றால் இப்போ தளபதி” என கூறினார் சுந்தர் சி. இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.