த்ரிஷா இல்லனா நயன்தாரா வா இல்லை,, த்ரிஷா தான், மற்றவர்களை குந்தவை.. பிரபலம் பேச்சு, ரசிகர்கள் கோபம்

25 683026fb3b45f

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.

மாடலிங் துறையில் களமிறங்கி ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்க இப்போது முன்னணி நாயகியாக வலம்வரும் த்ரிஷா நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் படம் தக் லைப்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா என பலர் நடிக்க ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ளது.

இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் யூகி சேது பேசும்போது, குந்தவை கதாபாத்திரம் பார்த்தேன், த்ரிஷா இல்லைனா நயன்தாரா நோ, த்ரிஷா இல்லைன்னா த்ரிஷா தான்.

அந்த குந்தவை வேற யாராவது நடிச்சாலும் அவர்களை ஓரமாக குந்தவை என கூறியுள்ளார். இதனை கேட்டு நயன்தாரா ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.

 

Exit mobile version