இனியாவை தரதரவென இழுத்துச் செல்லும் போலீஸ்! புதிய திருப்பத்தில் பாக்கியலட்சுமி

tamilni 50

இனியாவை தரதரவென இழுத்துச் செல்லும் போலீஸ்! புதிய திருப்பத்தில் பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் இனியா தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்கிறார். அங்கு சென்றதும் திரும்பி போய் விடுவோமா என கேட்க, உள்ளே என்ன நடக்குது என்ற பார்த்து விட்டு போவோம் என அவரது நண்பர்கள் இனியாவையும் உள்ளே அழைத்துச் செல்கின்றார்கள்.

அங்கு இனியாவின் நண்பர்கள் குடித்துவிட்டு டான்ஸ் ஆட இனியாவையும் இழுத்து வைத்து டான்ஸ் ஆடுகின்றார்கள். இனியாவும் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றார்.

இதன் போது அங்கிருந்த ஒருவர் இனியாவை பார்த்து யார் அந்த பொண்ணு என கேட்க, அவர்களுக்குள் தகராறு நடக்கின்றது. இதனால் அந்த இடத்திற்கு வந்த போலீஸ் எல்லோரையும் கைது செய்து கூட்டிப் போகின்றார்கள். அதில் இனியாவும் அரெஸ்ட் ஆகி செல்கின்றார்.

மறுபக்கம் பாக்யா இனியாவுக்கு போன் பண்ண போன் பண்ண அவர் எடுக்கவில்லை என்பதால் பதற்றமாக இருக்கின்றார் இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Exit mobile version