முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியது.
குற்றப் புலனாய்வு திணைத்தளத்தின் கோரிக்கையின் பேரில் தடுப்பு காவலில் உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனிடம், (பிள்ளையான்) ரணில் விக்ரமசிங்க பேச வேண்டும் என கூறி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த, சம்பவமே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
குறித்த இடமாற்றம் பதில் பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது.