எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே ஒரு நடிகை- யார் அவர் தெரியுமா?

01

எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே ஒரு நடிகை- யார் அவர் தெரியுமா?

எம்ஜிஆர் இவருக்கு அறிமுகம் தேவையா, கண்டிப்பாக இல்லை. சினிமாவில் ராஜ்ஜியம் செய்த இவர் அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்த ஒரு தலைவன்.

இப்போது அரசியலில் ஈடுபட நினைக்கும் பிரபலங்களுக்கு ஒரு உதாரணமாக இவர் இருக்கிறார் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு சினிமாவை தாண்டி அரசியல் மூலம் மக்களின் மனதை வென்றார். இவரைப் போலவே தான் விஜயகாந்த் அவர்கள் அரசியலில் வளர்ச்சி காண்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை.

புரட்சி தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், கொடுத்து கொடுத்து சிவந்த கைகள் என இத்தனை புகழுக்கும் ஒரே சொந்தக்காரர் எம்ஜிஆர் தான்.

எம்ஜிஆர் யாரையும் மிரட்டவோ, யாரிடமும் அதிகார தோரணையில் நடந்துகொள்ளவோ மாட்டாராம், மிகவும் பண்போடு நடந்துகொள்வாராம்.

எம்ஜிஆரை யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்களாம், ஆனால் ஒரே ஒரு நடிகை மட்டும் பெயர் சொல்லி அழைப்பாராம். மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என்று பலபேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நபர் நடிகை பானுமதி தானாம்.

எம்ஜிஆரை பானுமதி பெயர் சொல்லி அழைத்தாலும் அதை எம்ஜிஆர் மரியாதை குறைவாகவே எடுத்துக் கொள்ளாமல், எப்பவும் போல மிகவும் இயல்பாக பானுமதியுடன் பழகுவாராம்.

Exit mobile version