மதுர வீரன் தானே.. நயன்தாரா வீட்டுக்கு வந்த குலம் காக்கும் தெய்வம்.. வைரல் வீடியோ..!

tamilni 455

மதுர வீரன் தானே.. நயன்தாரா வீட்டுக்கு வந்த குலம் காக்கும் தெய்வம்.. வைரல் வீடியோ..!

நடிகை நயன்தாரா வீட்டிற்கு மதுரை வீரன் சிலை கொண்டுவரப்பட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர் என்பதும் தற்போது இரண்டு குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகள் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உடைய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகள் அவ்வ்ப்போது குலதெய்வம் கோயில் உள்பட பல கோயில்களுக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து உள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது மதுரை வீரன் சிலையை விக்னேஷ் சிவன் வீட்டில் வைத்துள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவின் பின்னணியில் ’மதுரை வீரன் தானே’ என பறவை முனியம்மா பாடிய பாட்டு ஒலிக்கும் நிலையில் இந்த சிலை சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மதுரை வீரன் குலம் காக்கும் தெய்வம் என்றும் அவர் இருக்கும் இடத்தில் எந்த பயமும் இருக்காது என்றும் ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Exit mobile version