தமிழ் நடிகர்களுக்கு நோ.. ஷாருக்கானுக்காக மட்டும் ஓகே சொன்ன நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது ஜவான் ஜவான் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இப்படம் மூலம் இவர் முதல் முறையாக ஹிந்தி சினிமாவிற்குள் என்ட்ரி ஆகிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இதுவரை எந்த ஒரு தென்னிந்திய திரைப்படங்களுக்கும் ப்ரோமோஷனுக்கு நயன் தாரா வரமாட்டார். தன்னுடைய கணவர் தயாரிப்பில் உருவான கனெக்ட் திரைபடத்திர்காக மட்டுமே கடைசியாக ப்ரோமோஷன் விழாவில் நயன் கலந்துகொண்டார்.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ப்ரோமோஷனுக்கு வராத நயன்தாரா தற்போது ஜவான் படத்திற்காக ப்ரோமோஷன் செய்ய ஓகே கூறியுள்ளாராம்.
ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்துகொள்ள மாட்டார். இதை அவர் தன்னுடைய கொள்கையாக வைத்துள்ளார்.
ஆனால், தற்போது தனக்கு பிடித்த நடிகர் ஷாருக்கானுக்காக தனது கொள்கையை நயன் விட்டுக்கொடுக்க போகிறார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் நயன்தாராவின் முடிவு எப்படி இருக்கும் என்று..