38 வயது நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் நயன்தாரா! யார் அந்த நடிகர் தெரியுமா

24 6635bc76b5f0e

38 வயது நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் நயன்தாரா! யார் அந்த நடிகர் தெரியுமா

நடிகை நயன்தாரா தற்போது இந்தியளவில் முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார். அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து நயன்தாராவிற்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா கைவசம் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கே.ஜி.எஸ் ஹீரோ யாஷுக்கு சகோதரியாக நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவை தேடி வந்துள்ளதாம். கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் யாஷுடன் இணைந்து பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவிருந்தார். அதுவும் அவருடைய சகோதரி கதாபாத்திரத்தில்.

சகோதரியாக நடிக்கும் நயன்தாரா
ஆனால், தற்போது கால்ஷீட் இல்லை என்பதால் டாக்சிக் படத்திலிருந்து கரீனா கபூர் விலகிவிட்டாராம். அவருக்கு பதிலாக தான், நடிகை நயன்தாராவை கமிட் செய்ய முடிவு செய்து, அவரிடம் கதையை கூறியுள்ளாராம் கீது மோகன்தாஸ்.

நயன்தாராவிற்கு கதை பிடித்துப்போக யாஷுடன் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version