10 13 scaled
சினிமாசெய்திகள்

இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா

Share

இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா 75 மற்றும் டெஸ்ட் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இதன்பின், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.

அவ்வப்போது நயன்தாரா தன்னுடைய மகன்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகும். அதை விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியிடுவார்.

ஆனால், இனிமேல் நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தான் அந்த புகைப்படங்கள் எல்லாம் வெளிவரப்போகிறது. ஆம், நடிகை நயன்தாரா முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.

ரஜினியின் ஜெயிலர் படம் பிஜிஎம் போட்டு தனது இரட்டை மகன்களுடன் மாஸ் என்ட்ரி கொடுக்கும் வீடியோவை நயன் தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். மேலும் முதல் முறையாக தன்னுடைய மகன்களின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...