ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடிக்க நாகார்ஜுனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா

24 66da8ff407fca

ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடிக்க நாகார்ஜுனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் 30 வருடமாக சினிமாவில் பணியாற்றி 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் புகழ்பெற்ற தொகுப்பாளராக உள்ளார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இவருக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் நாகார்ஜுனா நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகார்ஜுனா வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, இவர் கூலி படத்தில் நடிக்க ரூ. 24 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நாகார்ஜுனா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Exit mobile version