ரஜினிகாந்தின் தளபதி படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா? அந்த பிரபல நடிகரா!!
சில திரைப்படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அப்படிப்பட்ட படம் தான் ரஜினிகாந்தின் தளபதி திரைப்படமும்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 1991 -ம் ஆண்டு வெளியாகி மாபெரு வெற்றி பெற்றது. ரஜினிகாந்த் கேரியரில் வெளிவந்த பெஸ்ட் படங்களில் இந்த படமும் ஒன்று.
இப்படத்தில் மம்முட்டி, ஷோபனா, அரவிந்த்சாமி எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஒவ்வொரு பாடலும் இன்றும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது.
இந்நிலையில் தளபதி படத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது பிரபல தெலுங்கு நடிகர்நாகார்ஜுனா தான். சில காரணத்தால் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்று இயக்குனர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் முரளி அப்பாஸ், ரஜினியின் தளபதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.