24 66a7ab8871a02
சினிமா

தனுஷுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் சங்கம்! ஸ்டிரைக் அறிவிப்புக்கு கடும் கண்டனம்

Share

தனுஷுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் சங்கம்! ஸ்டிரைக் அறிவிப்புக்கு கடும் கண்டனம்

தமிழ் சினிமா துறையை மறுசீரமைக்கும் நோக்கில் அனைத்து சினிமா பணிகளும் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர் சங்கம் இன்று அறிவித்து இருக்கிறது.

இது பற்றி பத்திரிக்கை செய்தியை அவர்கள் வெளியிட்டு இருக்கும் நிலையில் நடிகர் சங்கம் அதற்கு தற்போது கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

இது பற்றி செய்தியாளர்களை சற்றுமுன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் கார்த்தி, “இது தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், வழக்கமாக அனைத்து சங்கங்களையும் கலந்தாலோசித்து தான் இந்த மாதிரி முடிவு எடுப்பார்கள். பல ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்க்கை இதில் இருக்கிறது” என கூறி இருக்கிறார்.

மேலும் தனுஷ் மீது நடவடிக்கை எடுப்பதாக தயாரிப்பாளர் சங்கம் கூறுகிறது, இதுவரை அவர் மீது ஒரு புகார் கூட நடிகராக சங்கத்திற்கு வந்ததில்லை.

நடிகர்களின் தொழிலை முற்றிலும் தடை செய்வதாக அறிவிப்பதை ஏற்க முடியாது. இது பற்றிய விளக்கம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும் என்ன செய்வது என்பது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என கார்த்தி கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...