25 68452e0cc970f
சினிமாசெய்திகள்

நடிகருடன் 2 ஆண்டுகள் டேட்டிங் செய்த தீபிகா படுகோன்.. பிரேக் அப் செய்த நடிகர்!

Share

மாடலிங் துறையில் இருந்து இப்போது நடிகராக வளர்ந்துள்ளார் முசமில் இப்ராஹிம். இவர் நடிகை தீபிகா படுகோனை 2 ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும், பின் பிரேக் அப் செய்துவிட்டதாகவும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகை தீபிகா படுகோன் 2000ம் ஆண்டு மும்பைக்கு வந்துள்ளார். அதன்பின் மாடலிங் துறையில் வெற்றிகரமாக இயங்கி, பின் பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த காலகட்டத்தில் முசமில் இப்ராஹிம் மற்றும் தீபிகா படுகோன் காதலித்துள்ளனர்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் முசமில் இப்ராஹிம் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது “நாங்கள் இரண்டு ஆண்டுகள் காதலித்தோம். தீபிகா மிகவும் உறுதியாக இருந்தார். ஏனென்றால் அவர் இறகுப்பந்து வீரர் பிரகாஷ் படுகோனின் மகள். அவரை அனைவருக்கும் தெரியும். அப்போது நான் ஸ்டாராக இருந்தேன். தீபிகா சாதாரணமாக இருந்தார். இப்போது அவர் சூப்பர்ஸ்டாராகிவிட்டார். என்னை யாருக்கும் தெரியவில்லை” என கூறியுள்ளார்.

டேட்டிங் குறித்து பேசிய முசமில் இப்ராஹிம், “அப்போது சிறுவர்களாக இருந்தோம். மலையில் ரிக்ஷவில் டேட்டிங், அது க்யூட்டாக இருக்கும். நான் அப்போது அவரை விட அதிகம் சம்பாதித்து வந்தேன். நான் கார் வாங்கியபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதன்பின், நான் ரிக்ஷவில் டேட்டிங் சென்றதே இல்லை. அந்த நினைவுகள் மிகவும் புத்துணர்வாக இருக்கின்றன. பணம் இல்லாமலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்” என்றார்.

மேலும் முசமில் இப்ராஹிம், அவர்தான் நடிகை தீபிகாவை பிரேக் அப் செய்ததாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...