முத்து மீனா நடுரோட்டில் சண்டை..அடுத்து வந்த ட்விஸ்ட்! சிறகடிக்க ஆசை புது ப்ரோமோ

tamilni Recovered

முத்து மீனா நடுரோட்டில் சண்டை..அடுத்து வந்த ட்விஸ்ட்! சிறகடிக்க ஆசை புது ப்ரோமோ
சிறகடிக்க ஆசை சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்கு முக்கிய காரணம் முத்து – மீனா ஜோடியின் நடிப்பு மற்றும் எதார்த்தமான கதை தான்.

தற்போது வெளியாகி இருக்கும் புது ப்ரோமோ வீடியோவில் முத்து மற்றும் மீனா இருவரும் நடுரோட்டில் சண்டை போடுவது போல காட்டப்பட்டு இருக்கிறது.

முத்து ஓட்டி வந்த கார் மீது மீனா வந்து மோதிவிடுகிறார். அதன் பின் இருவரும் சண்டை போடுகின்றனர். அதன் பின் போலீஸ் வந்து விசாரிக்கும்போது தான் அவர் தன் மனைவி என முத்து உண்மையை சொல்கிறார்.

அப்போது முத்துவின் காரில் வந்த நபர் சொன்ன விஷயத்தை கேட்டு மீனா கோபத்தில் உச்சிக்கே செல்கிறார்.

Exit mobile version