மீண்டும் அர்ச்சனா! – ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

vijay tv copy 1280x853

மீண்டும் விஜய் ரிவியில் தொகுப்பாளினியாக களமிறங்குகிறார் அர்ச்சனா.

தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு மூளையில்  சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தொகுப்பாளினி அர்ச்சனா விஜய் ரிவியில் தொகுத்து வழங்கிய  மிஸ்ர் & மிஸ்ஸிஸ் சின்னத்திரை  நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலையேற்பட்டது.

அர்ச்சனாவுக்கு பதிலாக நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்கியபோதும், நிகழ்ச்சி முன்னரைப் போல பிரபலமாகவில்லை.

மீண்டும் அர்ச்சனா நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக வந்துவிட்டதை உணர்த்தும் வகையில்  ஜேக் அன் ரோஷினி தங்களது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் அர்ச்சனாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அர்ச்சனா ஈஸ் பேக் என பதிவு செய்துள்ளனர்.

அர்ச்சனாவின் மீள்வருகைக்காக விஜய் ரிவி ரசிகர்கள் மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர்.

Exit mobile version