முதல்வன் படத்தில் நாயகியாக நடிக்க முதலில் தேர்வானதா மனிஷா கொய்ராலா இல்லையா… யார் தெரியுமா?

24 667b6a3d41a43 17

முதல்வன் படத்தில் நாயகியாக நடிக்க முதலில் தேர்வானதா மனிஷா கொய்ராலா இல்லையா… யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நிறைய படங்கள் உள்ளது, அதில் கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கிய இந்தியன் படம் மிகப்பெரிய பங்கு வகிக்கும்.

ரிலீஸ் ஆன நேரத்தில் ஒரு புரட்சிகரமான படமாக வெளியாகி பல விருதுகளையும் தட்டிச்சென்றது. தற்போது இந்தியன் 2 படம் படு பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது, அண்மையில் படத்தின் டிரைலரும் ரிலீஸ் ஆகி இருந்தது.

மொத்தமாக தயாராகியுள்ள இப்படம் வரும் ஜுலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தியன் 2 பட பிஸியில் இருக்கும் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான படம் முதல்வன்.

தற்போது இந்த படம் குறித்த ஒரு தகவலை தான் நாம் பார்க்கப்போகிறோம். அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர் அர்ஜுனின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என்றே கூறலாம்.

இந்த படத்தில் நாயகியாக மனிஷா கொய்ராலா நடித்திருப்பார், ஆனால் முதலில் முதல்வன் படத்தில் நாயகியாக நடிக்க தேர்வானது நடிகை மீனா தானாம்.

 

Exit mobile version