17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

Share

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் மூழ்கியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த சில பிரபலங்கள் மீது தற்போது போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால், திரையுலகத்தில் நம்பிக்கை இழப்பும்,கவலையும் ஏற்படத் தொடங்கியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் “நம்மட ஹீரோக்கள் இப்புடியா?” என்ற ஏமாற்றம் பெருகிக் கொண்டே வருகிறது. இந்த சர்ச்சையில் தற்போது மிகுந்த விவாதத்துக்குள்ளானவர்கள் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா.

ஒருகாலத்தில் தமிழ் திரையுலகில் முக்கிய இடம் பிடித்த நடிகராக விளங்கியவர் ஸ்ரீகாந்த். சமீப காலமாக வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். அத்துடன், நடிகர் கிருஷ்ணாவும் பல படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருந்தார்.

தற்பொழுது இருவருமே போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு உட்பட்டனர். இதனிடையே அவர்களது கைதுகள், விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஊடக சந்திப்பில்,போதைப்பொருள் வழக்குகள் மற்றும் நடிகர்கள் பற்றிய கேள்விக்கு சிறப்பாக பதிலளித்திருந்தார். அதன்போது மாரி செல்வராஜ், “யாரு பண்ணாலும் தப்பு, தப்பு தானே. நடிகர் என்றால் தப்பு பண்ணலாமா? சட்ட விரோதமா செய்யுற எல்லாமே தப்பு தான்.” எனவும் கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...