பிரம்மாண்ட கூட்டணி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ், பவன் கல்யாண் இணைந்து நடிக்கும் படம்? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!

1904165 27

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக எந்தப் படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜ் பற்றிய இரண்டு முக்கியத் தகவல்கள் இந்திய ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திற்காக அவர் சுமார் ரூ. 35 கோடி சம்பளம் பெறுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்ததாகப் பெரிய செலவில் ஒரு திரைப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களான பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத் திட்டமிட்டுள்ளார் என அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மெகா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version