நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்த மலையாளத் திரைப்படமான ‘லோகா’ (Loka), கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகிப் பெரும் வெற்றியைப் பெற்றது. கேரளா மட்டுமின்றித் தமிழ்நாடு, ஹிந்தி மாநிலங்கள் எனப் பல இடங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், ₹300 கோடிக்கும் மேல் வசூலித்த முதல் மலையாளப் படம் என்ற சாதனையைப் படைத்தது.
சாதனைப் படமான ‘லோகா’வின் வெற்றிக்குப் பிறகு, கல்யாணி ப்ரியதர்ஷன் தற்போது தமிழில் தனது புதிய படத்தைத் தொடங்கி இருக்கிறார்.
இந்தப் படத்தை எஸ். ஆர். பிரபுவின் (SR Prabhu) தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையில் உருவாகிறது.
பெண்கள் மையப்படுத்திய வலுவான கதைக்களத்துடன் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பதால், இந்தப் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்புத் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.