உச்ச நட்சத்திரங்கள் நடிகைகளின் உடலை வைத்து தான் இப்படி ஆனார்கள்.. கிழித்து எடுத்த இயக்குனர்
சினிமாவில் தினம்தோறும் எதாவது விஷயம் பரவலாக பேசப்பட்டு வரும். அப்படி சமீபத்தில் பிரபல இயக்குனர் லெனின் பாரதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பட விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் லெனின் பாரதி, உச்ச நட்சத்திரங்கள் குறித்து மிகவும் ஆவேசமாக பேசினார். திரிஷாவிற்கு எந்த ஒரு முன்னணி நட்சத்திரமும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
இதன்பின், இன்று உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள், நாட்டை ஆளவேண்டும் என துடிக்கும் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் பெண்ணின் உடலை வைத்து தான் இன்று உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளனர் என ஆவேசத்துடன் பேசினார்.
மேலும் ‘நான் சிறு வயதில் இருக்கும் போது, ரஜினி படமாக இருந்தாலும், கமல் படமாக இருந்தாலும் நடிகை சில்க் ஸ்மிதாவின் உடலை மையமாக வைத்து தான் போஸ்டர் இருக்கும். இதை பார்த்து தான் நான் வளர்ந்தேன்’ என கூறினார். இயக்குனர் லெனினின் இந்த பேச்சு தற்போது திரை வட்டாரத்தில் பரவலாகியுள்ளது.