சினிமா

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா..

24 66e565cdd3816
Share

பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது அறிமுக படத்திலேயே மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தனது இரண்டாவது படத்தையும் பூஜை போட்டு துவங்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கருடன் படத்தின் மூலம் 2024ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இயக்குனர் துரை செந்தில் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இந்த நிலையில், லெஜண்ட் சரவணனுக்கு இப்படத்தில் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பயல் ராஜ்புட் நடித்து வருகிறாராம்.

மேலும் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் ஷாம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என அவரே தெரிவித்துள்ளார்

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...