tamilni 393 scaled
சினிமாசெய்திகள்

ஜெயம் ரவியின் சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Share

ஜெயம் ரவியின் சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்யின் சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் சைரன். ரிவென்ஜ் கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏற்கனவே கோமாளி படத்தில் ஹிட் காம்போ என நிரூபித்த ஜெயம் ரவி – யோகி பாபு கூட்டணி இப்படத்தில் இணைந்தது.

மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்நிலையில், சைரன் படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் கடந்த மூன்று நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

எதிர்பார்த்ததை விட இது குறைவான வசூல் தான் என திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், இனி வரும் நாட்களில் சைரன் திரைப்படத்தின் வசூல் எப்படி இருக்க போகிறது என்று.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...