28
சினிமாசெய்திகள்

ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற கமல்.! – ஸ்டாலின் வாழ்த்துக்கு எமோஷனல் பதில் கூறிய உலகநாயகன்.!

Share

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், இந்திய சினிமாவே பெருமையாக எண்ணும் கலைஞானி கமல்ஹாசனுக்கு, இந்த ஆண்டின் ஆஸ்கர் அகாடமி விழாவில் (Academy of Motion Picture Arts and Sciences) கலந்து கொள்ளும் பிரமாண்டமான அழைப்பு கிடைத்துள்ளது. இது தமிழர்களுக்கு பெருமையைத் தரும் ஒரு தருணமாக மாறியுள்ளது.

இந்திய திரைத்துறையின் முக்கிய முகமாக விளங்கும் கமல்ஹாசன், பல்வேறு தளங்களில் சினிமாவை ஒரு கலை வடிவமாக உயர்த்தி, உலக அளவில் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றவர். அவரது “நாயகன்”, “சகலகலா வல்லவன்”, “தசாவதாரம்” போன்ற படங்கள் சினிமாவின் எல்லைகளை தாண்டிச் சென்றவை.

அந்த வகையில், கமல்ஹாசனுக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் இந்திய சினிமாவிற்கு, குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு கிடைக்கும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்!” என்ற பதிவினை வெளியிட்டிருந்தார்.

முதலமைச்சரின் வாழ்த்துகளை பெற்றதும், கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் தற்பொழுது பதில் அளித்துள்ளார். அதன்போது, “ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி.” எனக் கூறியுள்ளார். இந்த கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...