2 12 scaled
சினிமாசெய்திகள்

ஏற்கனவே ‘இளையராஜா’ பயோபிக் வந்துருச்சே.. நெட்டிசன்கள் தரும் ஆச்சரிய தகவல்கள்..

Share

ஏற்கனவே ‘இளையராஜா’ பயோபிக் வந்துருச்சே.. நெட்டிசன்கள் தரும் ஆச்சரிய தகவல்கள்..

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆன ’இளையராஜா’ என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் நேற்று வெளியான இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இளையராஜாவின் கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் தொடக்க விழாவில் பாரதிராஜா, கமல்ஹாசன் உள்ளிட்ட ஒருசிலர் வருகை தந்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் ஏற்கனவே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வந்துவிட்டது என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் பதிவு செய்யும் அந்த படம் தான் எஸ்.ஜே.சூர்யா நடித்து, இயக்கிய ’இசை’ என்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஒரு இசை கலைஞன் உச்சத்தில் இருக்கும்போது திடீரென அந்த இசை கலைஞனை வீழ்த்துவதற்கு இன்னொரு இசைக்கலைஞர் சதி செய்வதும் அந்த சதியால் அவர் வீழ்ந்தபின் அவர் மீண்டும் எப்படி மீண்டு இருக்கிறார் என்பதுதான் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் திரையரங்குகளில் வெளியான போது இசைஞானி இளையராஜா மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இடையே நடந்த மறைமுகமான மோதல் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்பட்டது. எனவே இந்த படத்தையே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு என எடுத்து கொள்ளலாம் என்பதே நெட்டிசன்களின் பதிவாக உள்ளது.

இந்த படத்திற்கு இசையமைக்க ஏ ஆர் ரகுமானிடம் எஸ் ஜே சூர்யா சென்றபோது இந்த படத்தின் கதையை கேட்டு தன்னுடைய கதை போல் இருக்கிறது என்பதால் இந்த படத்திற்கு இசையமைக்க முடியாது என்று அவர் கூறிவிட்டதாகவும் அதன் பிறகு தான் எஸ்ஏ சூர்யாவே இந்த படத்திற்கு இசையமைத்ததாகவும் கூறப்பட்டது.

எனவே ’இசை’ படம் தான் இளையராஜாவின் முதல் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்றும் அப்படி இருக்க மீண்டும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை எதற்கு மீண்டும் எடுக்கிறார்கள் என்றும் நெட்டிசன்கள் கேலியாக பதிவு செய்து வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...