தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா, நேற்று (நவம்பர் 18) தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குத் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அவரது கணவர் விக்னேஷ் சிவன் அளித்த விலையுயர்ந்த பரிசு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது காதல் மனைவி நயன்தாராவிற்குப் பிறந்தநாள் பரிசாக ஒரு விலையுயர்ந்த ரோல்ஸ் ரோய்ஸ் (Rolls-Royce) காரைப் பரிசளித்துள்ளார்.
இந்தப் பரிசளிக்கப்பட்ட காரின் விலை சுமார் 10 கோடி இந்திய ரூபாய் (ரூ. 100 மில்லியன்) பெறுமதி இருக்கும் என்று கூறப்படுகிறது. 2005ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்துத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நயன்தாரா.
தற்போது அதிகச் சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
நடிகையாக, தயாரிப்பாளராக மட்டுமின்றி, சொந்தமாகப் பல தொழில்களிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

