இந்தியில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

24 66badd63e4d2a

இந்தியில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். ஆம், முதல் முறையாக இவர் கதாநாயகியாக இந்தியில் நடித்துள்ள திரைப்படம் தான் பேபி ஜான்.

இது தமிழில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். தமிழில் இப்படத்தை அட்லீ இயக்கியிருந்த நிலையில், இந்தியில் உருவாகியுள்ள இப்படத்தை அவரே தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தை கலீஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்கு முன் கீ எனும் திரைப்படம் தமிழில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து தற்போது பேபி ஜான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறதாம். கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்கின்றனர்.

வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தெறி படத்தில் சமந்தா நடித்திருந்த கதாபாத்திரத்தில் தான் இந்தியில் கீர்த்தி சுரேஷ் ஏற்று நடித்துள்ளாராம். இந்த நிலையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version