தனுஷ் படத்தை தொடர்ந்து அஜித் படத்தின் சீனையும் காப்பியடித்த கயல் தொடர் குழு- என்ன சீன் பாருங்க

tamilni 13

தனுஷ் படத்தை தொடர்ந்து அஜித் படத்தின் சீனையும் காப்பியடித்த கயல் தொடர் குழு- என்ன சீன் பாருங்க

சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் தான் இப்போது டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது.

வாரா வாரம் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் 5ல் அதிகமாக சன் தொடர்கள் இடம் பிடிக்கும். அப்படி அந்த தொலைக்காட்சியில் தொடர் ஆரம்பித்தது முதல் டாப்பிலேயே இருப்பது கயல் தொடர் தான்.

சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவரும் இந்த சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

கடந்த சில வாரமாக கயல் சீரியல் டிஆர்பியில் பின்தங்கி இருக்கிறது, இதனால் புது புது சீன்களை இயக்குனர் புகுத்தி வருகிறார். அதாவது அஜித்-த்ரிஷா நடித்த கிரீடம் படத்தின் காட்சியை அப்படியே காப்பி அடித்துள்ளார்கள்.

இதற்கு முன் சீரியலில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதோ என்ற பாடலுக்கு நாயகன்-நாயகி நடனம் ஆடிய காட்சி இடம்பெற்றிருந்தது.

தனுஷ் படத்தை தொடர்ந்து இப்போது அஜித்தின் கிரீடம் பட காட்சியை காப்பியடிக்க ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

 

Exit mobile version