7 3
சினிமா

நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை! ரிலேஷன்ஷிப் குறித்து பேசிய நடிகை கயாடு லோஹர்

Share

இன்றைய சென்சேஷனல் நாயகிகளில் ஒருவர் கயாடு லோஹர். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியும் இவர் தான். சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளிவந்தது. கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் ரிலேஷன்ஷிப் குறித்து நடிகை கயாடு லோஹரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சிரித்துக்கொண்டே கயாடு லோஹர் கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதகவது “இன்றைய தலைமுறை புதுப்புது வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்களை கண்டுபிடித்து வருகிறார்கள். எனக்கு தெரிந்து ‘ஷிப்’ என்றால் கப்பல் தான். நீங்கள் கூறுவது போல் இப்போது ரிலேஷன்ஷிப், சிச்சுவேஷன்ஷிப் என பல ‘ஷிப்’கள் வந்துவிட்டன. நீங்கள் நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை. நான் ரொம்ப நல்ல பொண்ணு. நான் இப்பொது எந்த ஒரு ஷிப்பிலும் இல்லை. அவ்வளவு எளிதாக எதிலும் மாட்டிக்கொள்ள மாட்டேன்” என கயாடு லோஹர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
download 3
பொழுதுபோக்குசினிமா

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உச்சம்: 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சின்னர்ஸ் உலக சாதனை!

இயக்குநர் ரியான் கூக்ளர் (Ryan Coogler) இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) எனும் திகில் திரைப்படம்,...

26 69710ff1c7c80
பொழுதுபோக்குசினிமா

14 வயதாகியும் செல்போன் இல்லை! மகள் ஆராத்யாவை கண்டிப்புடன் வளர்க்கும் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியரின் மகள் ஆராத்யா பச்சன், ஒரு...

image 3 2rcm9
பொழுதுபோக்குசினிமா

அமிதாப் பச்சனின் வீட்டில் தங்கக் கழிவறை 10 கோடி ரூபாய் பெறுமதியா? வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் ஜாம்பவான் அமிதாப் பச்சனின் மும்பை இல்லமான ‘ஜல்சா’வில் உள்ள தங்கக் கழிவறை (Golden Toilet)...

26 697099df586de
பொழுதுபோக்குசினிமா

இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சந்தானம்!

சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே...