அண்ணன் சூர்யாவுக்கு குரல் கொடுத்த தம்பி கார்த்தி.. எந்த படத்தில் தெரியுமா

24 66d2ab428edc6

அண்ணன் சூர்யாவுக்கு குரல் கொடுத்த தம்பி கார்த்தி.. எந்த படத்தில் தெரியுமா

அண்ணன் மற்றும் தம்பி என இருவரும் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்தனி ரசிகர் கூட்டத்தை தன் நடிப்பு திறமையாலும் உழைப்பாலும் சம்பாதித்தவர்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி.

இவர்கள் பாசத்தை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்திற்கு டப் செய்துள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் மாற்றான். இந்த படம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கில் பிரதர்ஸ் என்ற பெயரில் வெளியானது. இப்படம் இரட்டையர்கள் கதை என்பதால் அகிலனுக்கு சூர்யா டப் செய்துள்ளார்.

தெலுங்கு படத்தில் சூர்யா டப் செய்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில், சிங்கம் 2 திரைப்படத்தில் சூர்யா பிஸியாக இருந்ததால் அவர் தம்பியும், நடிகருமான கார்த்தி மாற்றான் படத்தில் விமல் கதாபாத்திரத்திற்கு டப் செய்துள்ளார்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து கங்குவா படத்தில் முதல் முறையாக நடித்துள்ளனர். கார்த்தி கங்குவா படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்றும், கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லனாக வருவார் என்றும் சொல்லப்படுகிறது.

Exit mobile version