கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

24 6727226fbd4a7

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வருகிற 14ஆம் தேதி கங்குவா படம் வெளிவரவுள்ளது, இதில் கங்குவா படத்திற்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிக்காக அனுமதி கேட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்தால் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version