tamilni 121 scaled
சினிமாசெய்திகள்

திடீரென தக் லைப் படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர்! என்ன நடந்தது தெரியுமா?

Share

திடீரென தக் லைப் படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர்! என்ன நடந்தது தெரியுமா?

இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் அறிவிக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் படம் தக் லைஃப். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்தில் கமலஹாசன், திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்திலிருந்து முன்னணி நடிகர் விலகப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.

கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம், நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் கழித்து தக் லைஃப் படத்திற்காக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் கமல்ஹாசனின் 234வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அநேகமான நடிகர்கள் இணைந்திருக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது வெகு தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் மலையாள நடிகரான துல்கர் சல்மான் தக் லைஃப் படத்தில் இணைந்திருப்பதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இவருக்கான ஆன் போர்டு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது. கால்ஷீட் பிரச்சினை மற்றும் தொடர்ந்து கமிட்டாகி இருக்கும் படங்களால் இந்த படத்திற்கு தேதிகளை ஒதுக்க முடியாததால் தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகி இருப்பதாக சில தகவல் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகி உள்ளது. கூடிய விரைவில் துல்கர் சல்மான் விலகிய கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்கிற அப்டேட்டை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
5 15
உலகம்செய்திகள்

தனக்கு தானே சிலை வைத்த டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளமை...

4 14
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

வாகன இறக்குமதி நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

2 23
இலங்கைசெய்திகள்

35 சபைகளிலும் தமிழரசுக் கட்சி தலைமைக்கு முயற்சி

தமிழர் தாயகத்தில் 35க்கும் குறையாத உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில்...

3 15
உலகம்செய்திகள்

போர் இனிமேல் வேண்டாம்: புதிய பாப்பரசர் வல்லரசுகளுக்கு வேண்டுகோள்

போர் இனிமேல் போர் வேண்டாம் என புதிய பாப்பரசர் லியோ ஓஐஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். பாப்பரசராக...