கமலின் 237 – வது படம் குறித்து வந்த அதிரடி அப்டேட்.. இணைந்த முன்னணி இசையமைப்பாளர்

23 645e1a46e4921

கமலின் 237 – வது படம் குறித்து வந்த அதிரடி அப்டேட்.. இணைந்த முன்னணி இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்றும் அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இருப்பினும் உலகநாயகன் பட்டமே வேண்டாம் என அவர் சமீபத்தில் அறிவித்து விட்டார். இவர் நடிப்பில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது.

ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வசூல் பெறாமல் தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து, கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பின், இயக்குனர் பா.ரஞ்சித் நடிப்பில் ஒரு படத்திலும், நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்புமணி, அறிவுமணி ஆகியோர் கமலின் 237 – வது படத்தை ஆக்சன் படமாக எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தனர்.  அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறதாம்.

இந்நிலையில் ஜி.வி பிரகாஷ் தற்போது கமலின் 237 படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி.வி பிரகாஷ் சமீபத்தில் கமல் தயாரித்த அமரன் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் அது பெரிய ஹிட் ஆனது, அதனால் தான் தனது படத்துக்கும் அவரையே கமல் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

Exit mobile version