38 2
சினிமா

தக் லைஃப் படத்தின் கதை இதுதானா?.. கமல்ஹாசன் உடைத்த ரகசியம்

Share

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஜூன் 5 – ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், படத்தின் கதை குறித்து சில சுவாரசியமான தகவலை கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், ” தக் லைஃப் படத்தின் கதையை நான் தான் எழுதினேன்.

அதில் இருந்து ஒரு விஷயத்தை மாற்றி கிளைமேக்ஸை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார் மணி ரத்னம்” என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் முன்னதாக தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்தார். அவர் எழுதிய அந்த கதைக்கு அமர் ஹைன் என டைட்டில் வைத்தார்.

இந்த கதையில் நாயகன் இறந்துவிட்டார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, அவர் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்பது குறித்து படம் இருக்கும் என கூறியுள்ளார். இதனால் இந்த படத்தை சற்று மாற்றி தான் தக் லைஃப் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...