ஒரே ஒரு நிமிட பேட்டியில் 4 படங்களின் அப்டேட் கொடுத்த கமல்.. ‘தக்லைஃப்’இல் வில்லன் இல்லை..!
உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரே ஒரு நிமிடத்தில் தன்னுடைய நான்கு படங்களின் அப்டேட் கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ மற்றும் ’இந்தியன் 3’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி 2898ஏடி’ படத்தில் வில்லனாக நடித்து வருவதாக கூறப்பட்டது. மேலும் அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகி ஆக த்ரிஷா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமல்ஹாசன் சமீபத்தில் ஆங்கில ஊடகம் அன்று ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது இந்த நான்கு படங்களின் அப்டேட்டை ஒரே ஒரு நிமிடத்தில் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ’இந்தியன் 2’ மற்றும் ’இந்தியன் 3’ திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாகவும் ’இந்தியன் 2’படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கமல்ஹாசன் கூறினார்.
இதையடுத்து பிரபாஸ் உடன் நடித்து வரும் ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக கூறினார். இந்த படத்தில் வில்லனாக கமல் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் இந்த பேட்டியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தேர்தல் பிரச்சாரத்துக்கு பின்னர் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தற்போது வரை எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்தபோது திருப்தியாக இருந்தது என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
இளம் நடிகர்கள் கூட ஒரே நேரத்தில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில் கமல்ஹாசன் இந்த வயதிலும் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மட்டும் இன்றி ’எஸ்கே23’ படம் ஒரு சில படங்களை அவர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- actor kamal haasan
- ikamalhaasan
- kamal haasan
- kamal haasan 232
- kamal haasan 234
- kamal haasan god
- kamal haasan kh234
- kamal haasan news
- kamal haasan on mnm
- kamal haasan pm
- kamal haasan songs
- kamal hasan songs
- Kamal hassan
- kamal hassan 234
- kamal hassan biography
- kamal hassan hit movies
- kamal hassan life story
- kamal hassan movies
- kamal hassan songs
- kamal hassan speech
- kamal hassan tamil nadu
- kamal hassan video songs
- kamalhassan hit movies
Comments are closed.